ETV Bharat / jagte-raho

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது: 3 கிலோ கஞ்சா பறிமுதல் - Mayiladuthurai District Superintendent of Police Srinatha

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்பனைசெய்த ஐந்து பேரை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்து, மூன்று கிலோ கஞ்சா பொட்டலத்தைப் பறிமுதல்செய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Dec 3, 2020, 6:35 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குப் புகார் வந்தது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவின்பேரில், தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், காவலர் கார்த்திக் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சித்தர்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதையறிந்த தனிப்படை காவல் துறை, விற்பனையில் ஈடுபட்ட சீர்காழி வேட்டங்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பழனி (19), செங்கல்பட்டு வேதாரண்யபுரம் பகுதியைச் சேர்ந்த தாவூத் மகன் வாஸித்தா என்கிற கார்த்தி (21), மயிலாடுதுறை திருவிழந்தூரைச் சேர்ந்த போண்டா என்கிற ராம்குமார் (23) ஆகிய மூன்று பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோன்று மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற பங்காளி வினோத், அம்மா மணிகண்டன் ஆகிய இரண்டு பேரை மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு தலைமையிலான காவல் துறையினர் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறையின் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதால், அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களுக்கு மக்கள் தகவல் அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இல்லை - கே.எஸ். அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.