மும்பை: ‘மியோவ் மியோவ்’ என்றழைக்கப்படும் மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
அக்.7ஆம் தேதியன்று சிலர் போதைப்பொருள் கடத்திக் கொண்டு சக்கானுக்கு வரவுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர், தகவலின் பேரில் அவ்வழியாக ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சக்கான் ஷிக்ராபூர் சாலையில் உள்ள ஷெல் பிம்பல்கான் கிராமத்திற்கு அருகே வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அதில் வெள்ளை நிறம் கொண்ட பவுடர் பாக்கெட்டுகள் இருந்துள்ளன. பின்னர், சோதித்துப் பார்த்ததில் அது ‘மியோவ் மியோவ்’ என்றழைக்கப்படும் ‘மெபெட்ரோன்’ எனும் போதைப்பொருள் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த ஐந்து பேரும் சேதன் ஃபக்காட் தண்டாவத்தே, சஞ்சீவ்குமார் பன்சி ரவுத், ஆனந்த்கீர் கோசாவி, அக்ஷய் காலே, தவுசிஃப் ஹசன் முகமது தஸ்லிம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையர் கிருஷ்ணா பிரகாஷ் கூறுகையில், “தற்போது இந்த ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 10 நாள்கள்வரை காவல்துறை விசாரணையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் இவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விமானங்களின் தகவலை பாகிஸ்தானுக்கு அளித்த எச்ஏஎல் அலுவலர் கைது!