கைது செய்யப்பட்ட ஆயுஷ் பாண்டே, ரோஹித் ராம், நூர் அலி ஆகிய மூவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெங்களூரு அருகே மைகோ லேஅவுட் பகுதியில் கொரியர் வேலை பார்த்துவந்துள்ளனர்.
இதனைச் சாதகாமாகப் பயன்படுத்திக் கொண்டு ஸ்பீக்கர் பாக்ஸ், டெடி பியர் போன்ற பொம்மைகள் உள்ளிட்ட பொருள்களுக்குள் போதைப் பொருள்களை மறைத்துவைத்து அவர்களின் வாடிக்கையாளர்கள் விற்பனை செய்துவந்துள்ளனர்.
இதுதொடர்பாகத் தகவலறிந்ததையடுத்து காவல் துறையினர் மூவரையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். மேலும் அவர்களிடம் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கைப்பற்றி அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.