திண்டுக்கல்: பழனியில் மிதிவண்டி திருட்டில் ஈடுபட்ட நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையம் எதிரேயுள்ள மருந்தகத்தில் பணியாற்றி வருபவர் முகமது. இவர் கடைக்கு முன் பகுதியில் தனது மிதிவண்டியை நிறுத்தியுள்ளார்.
இவ்வேளையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முகமதின் மிதிவண்டியைத் திருட முயற்சி செய்துள்ளார். இதைக்கண்டு சுதாரித்துக் கொண்ட மருந்தகத்தின் உரிமையாளர் லாவகமாக பின்தொடர்ந்து, மிதிவண்டியைத் திருடிச் சென்றவரை கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நகர்ப்பகுதி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அருகில் இருந்த கடையின் கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளை கைப்பற்றி, திருட்டில் ஈடுபட்ட நபரை கைதுசெய்தனர். முன்னதாக பழனி பகுதியில் சமீபகாலமாக மிதிவண்டி திருட்டில் ஈடுபட்டது இவர்தான் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.