ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு கடந்த 4ஆம் தேதி சட்டவிரோதமாக வந்த பிரதீப் குமார பண்டாரேவை மரைன் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், உளவுத்துறை அலுவலர்கள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கை கொழும்பு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றியது தெரியவந்தது.
தனது அண்ணன் மூலம் காவல் நிலையத்திலிருந்த 20 கிலோ பிரவுன் சுகரை விற்பனை செய்துள்ளார். இதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடி வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் மரைன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்ற நீதிபதி விஜய் முன்பு ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 18ஆம் தேதி வரை பிரதீப் பண்டாராவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தற்போது இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் பண்டாராவை ஐந்து நாள் காவலில் விசாரிக்க ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அலுவலர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.
![பிரதீப் குமார பண்டாரா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-court-order-5-day-cbcid-police-custody-srilankan-police-visual-script-7204441_17092020170624_1709f_1600342584_153.jpg)
இந்நிலையில், ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றம், குமார் பண்டாராவை ஐந்து நாள்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தது. மேலும், விசாரணை முடிந்ததும், அவரை 21ஆம் தேதி, மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 45,222 குழந்தைகளுக்கு சிகிச்சை'