ETV Bharat / jagte-raho

லாரி மோதி தாயின் கண் முன்னே உயிரிழந்த 4 வயது சிறுவன்! - சென்னை

சென்னை: தண்ணீர் லாரி மோதி தாயின் கண் முன்னே நான்கு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான இடம்
author img

By

Published : Aug 31, 2019, 12:05 AM IST

சென்னை விருகம்பாக்கம் லோகநாதன் தெருவை சேர்ந்தவர் நிஜாமுதீன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் சுல்தானா. இவர்களின் மகன் முகமது உவைஸ் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்தார்.

இந்நிலையில், நஸ்ரின் சுல்தானா பள்ளி முடிந்தபின் தன் மகனை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த தண்ணீர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் மூவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுவன் உவைஸ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் நஸ்ரின் சுல்தானா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து, சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி மோதி தாயின் கண் முன்னே உயிரிழந்த 4 வயது சிறுவன்!

தாய் கண் முன்னே மகன் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Intro:வளசரவாக்கத்தில் தண்ணீர் லாரி மோதியதில் தாய் கண் முன்னே 4 வயது மகன் பலி.

Body:சென்னை விருகம்பாக்கம் லோகநாதன் தெருவைச் சேர்ந்தவர் நிஜாமுதீன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் சுல்தானா இவர்களுக்கு முகமது உவைஸ் என்ற 4 வயது மகன் உள்ளார். இவர் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்துவந்தார் இன்று மாலை பள்ளி முடிந்து தனது மகனை வீட்டிற்கு நஸ் ரீன்
சுல்தானா மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக்கொண்டு அழைத்துச் சென்று கொண்டிருந்தார் வளசரவாக்கம் அன்பு நகர் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியே வந்த தண்ணீர் லாரி
மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுவன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனான்.Conclusion:இதனைக்கண்டதும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினான் அங்கிருந்த பொதுமக்கள் லாரி டிரைவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து லாரி டிரைவரை கைது செய்தனர். மேலும் இந்த விபத்தில் நஸ்ரீன் சுல்தானா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தாய் கண் முன்னே மகன் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.