ETV Bharat / jagte-raho

கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன்: யார் இந்த அங்கொடா லொக்கா? - இலங்கை கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா

மதுரை: கோவையில் இறந்து மதுரையில் தகனம் செய்யப்பட்ட இலங்கை கடத்தல் மன்னன் அங்கொடா லொக்காவின் வழக்கை சிபிசிஐடி மதுரையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

angoda-lokka
angoda-lokka
author img

By

Published : Aug 4, 2020, 8:08 PM IST

Updated : Aug 4, 2020, 9:27 PM IST

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் அங்கொடா லொக்கா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டில் 7 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார். இலங்கை காவல்துறையின் பிடியில் சிக்காமல் அங்கிருந்து தப்பித்து சென்னையில் பதுங்கியுள்ளார்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு இலங்கையிலுள்ள இணைய தளம் ஒன்றில் இலங்கையில் நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா இந்தியாவில் மரணமடைந்துவிட்டதாகவும், கோவையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டதாகவும் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து இலங்கை தூதரகம் மூலம் கிடைத்த தகவலைப் பெற்று, கோவை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

நடந்தது என்ன?

அங்கொடா லொக்கா கடந்த ஆறு மாதங்களாக கோயம்புத்தூர் கோவை விமான நிலையம் அருகிலுள்ள சேரன் மாநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில், பிரதீப்சிங் என்ற பெயரில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

காவல்துறையின் புலன் விசாரணை

இதனையடுத்து அவரது உடல் மதுரைக்கு கொண்டுச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பாக பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், மதுரையைச் சேர்ந்த சிவகாமசுந்தரி கொடுத்த ஆதார் அட்டை பிற ஆவணங்களை ஆய்வு செய்ததில், இறந்தவர் பிரதீப்சிங் இல்லை என்றும், இலங்கை தாதா அங்கொடா லொக்கா என்பது தெரியவந்தது. கோயம்புத்தூரில் அங்கொட லொக்காவுடன் அம்மானி தான்ஷி என்ற 27 வயது பெண் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் மற்றும் அம்மானி தான்ஷி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அமானி தான்ஷி உடல்நலக் குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்கள் சிக்கியது எப்படி?

பெரும் பரபரப்பை கிழப்பியுள்ள இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்ட நிலையில், சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில் விசாரணை குழு அமைத்து கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை செய்து வருகிறது. போலி ஆவணங்களில் உள்ள முகவரியான மதுரை பாசிங்காபுரம் பகுதியிலும், தத்தனேரி மயான ஊழியர்களிடமும் சிபிசிஐடி அலுவலர்கள் நேற்றிரவு (ஆகஸ்ட் 3) முதல் தொடர் விசாரணை நடத்தினர்.

தத்தனேரி மயான பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களிலும் ஜூலை 5ஆம் தேதிக்கான பதிவுகளை ஆய்வு செய்தனர், அங்கொடா லொக்காவின் உடல் கொண்டு வந்தபோது யார் உடன் வந்தார்கள் யாரை தொடர்புகொண்டார்கள் என்பது குறித்தும் விசாரணையில் ஈடுபட்டனர். இதேபோன்று ஊழியர்கள் யாரேனும் உதவினார்களா என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்திய நிலையில் அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கவுள்ளனர்.

பொதுமக்கள் பார்வையில் அங்கொடா லொக்கா?

கோயம்புத்தூரில் லொக்காவுடன் வசித்து வந்த மக்கள் கூறியதாவது, "அவர் பெயர் அங்கொடா லொக்கா என்பது இதுவரை தெரியாது. ஊடகத்தில் இது போன்று செய்தி வந்த பின்பு தான் அவர் பெயரே தெரியும். அவர் எப்போதாவது வந்து உணவு சாப்பிடுவார். கடைக்கு வந்தால் பார்சல் தான் வாங்குவார். தோசை புரோட்டா என்றால் 10, 20 என வாங்கி செல்வார்.

அவர் மட்டும் தான் வருவார். வரும் போது நகை அணிந்து பணக்காரர் போல வருவார். கோழி கறி ஏதாவது இருந்தால் விரும்பி வாங்கி செல்வார். தமிழ் ஒரளவிற்கு தான் பேசுவார். நாங்கள் அவரை மலையாளி என்றே நினைத்தோம். மலையாளி போல தான் பார்ப்பதற்கு இருப்பார். அவரிடம் ஒரு முறை பேசும் போது சொந்த ஊர் துபாய் என்று கூறினார்". இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.

யார் இந்த அங்கொட லொக்கா

பிரபல போதைபொருள் வர்த்தகரான மாகந்துர மதுஷின் நெருங்கிய கூட்டாளியாக லொக்கா இருந்துள்ளார். அங்கொடா லொக்காவின் குழு கடந்த 2000ஆம் ஆண்டுகளில் குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சி காலத்தில் அங்கொடா லொக்கா நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்த நிழல் உலக கோஷ்டி வெளிநாட்டில் இருந்தே போதை பொருள் சப்ளை, கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இவரது நெருங்கிய கூட்டாளியான மாகந்துர மதுஷ் 2019ஆம் ஆண்டு துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இந்தச் சூழலில், பிரதீப்சிங் பெயரில் வாழ்ந்து தாதா அங்கொடா லொக்கா மாரடைப்பால் உயிரிழந்து மதுரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இத்துணுண்டு பார்சல்ல இம்புட்டு தங்கமா? ஸ்வப்னாவுக்கும் தொடர்பா?

Last Updated : Aug 4, 2020, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.