ETV Bharat / jagte-raho

பெண் குழந்தை கடத்தல் - சென்ட்ரலில் அதிர்ச்சி நிகழ்வு! - குழந்தை கடத்தல்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் படுத்திருந்த பெண் குழந்தை கடத்தப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kidnap
kidnap
author img

By

Published : Jan 13, 2020, 4:26 PM IST

அசாம் மாநிலத்தை சேர்ந்த மர்சீனாவுக்கு அஜிதா, ரஜிதா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது கணவர்களை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த மர்சீனா, கடந்த 10 நாட்களாக தனது மூன்றாவது கணவர் அமீது என்பவருடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவர் அமீது மற்றும் இரண்டு குழந்தைகளோடு நேற்று இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மர்சீனா படுத்துறங்கியுள்ளார். கண் விழித்துப் பார்க்கும்போது, இரண்டாவது குழந்தையான ரஜிதா அங்கில்லாதது கண்டு அதிர்ச்சியடந்த மர்சீனா, ரயில் நிலைய காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் மேற்கொண்ட விசாரணையில், மூன்றாவது கணவர் அமீதுக்கும் அவரது நண்பருக்கும் ஏற்பட்ட தகராறில், அவரது நண்பர் ரஜிதாவை தூக்கிச் சென்றதாகவும் தெரிவித்தனர். மேலும் தற்போது அமீது, அவரது நண்பர் மற்றும் குழந்தை ரஜிதாவை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமீதுடன் ஏற்பட்டத் தகராறில் ரஜிதாவை அவரது நண்பர் தூக்கிச் சென்றதாக காவல்துறை தகவல்

மர்சீனாவின் கணவருக்கும், அவரது நண்பருக்கும் எதற்காக பிரச்சனை ஏற்பட்டது, கடத்தப்பட்ட குழந்தை எங்கு இருக்கிறது, இவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: டிராக்டர் மீது ஏரிய கர்நாடகா பேருந்து: ஓட்டுநர் உயிரிழப்பு

Intro:Body:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரண்டு வருட பெண் குழந்தையை காணவில்லை என்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவல்துறையில் புகார்...

அசாம் மாநிலத்தை சேர்ந்த மர்சீனா வயது 25 இவருக்கும் அசார் அலி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது. அவர்களது பெயர் அஜிதா மற்றும் ரஜிதா இரண்டு பெண் குழந்தைகளோடு முதல் கணவன் அசார் அலியை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்...

இரண்டாவது கணவனையும் கடந்த சில வாரங்களாக மர்சீனா பிரிந்து கடந்த 10 நாட்களாக மூன்றாவது கணவர் அமீது என்பவருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரோடு நேற்று இரவு இரண்டு குழந்தைகளோடு படுத்து உறங்கி உள்ளார். பின்னர் கண் விழித்துப் பார்க்கும் பொழுது முதல் கணவருடைய இரண்டாவது குழந்தையான ரஜிதாவை காணவில்லை என்று சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்...

விசாரணையில் மூன்றாவது கணவர் அமீதுக்கும் அவரது நண்பருக்கும் ஏற்பட்ட தகராறில் ரஷிதாவை தூக்கி சென்றதாகவும் தற்போது மூன்றாவது கணவன் அமீது மற்றும் அவனது நண்பர் குழந்தை ரசீதையும் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்...

மூன்றாவது கணவருக்கும் அவரது நண்பருக்கும் எதற்காக பிரச்சினையை நடைபெற்றது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா அல்லது மர்ஜினாவால் ஏதாவது பிரச்சினை இவர்களுக்குள் இருக்கிறதா என்பது குறித்து தகவல் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.