ETV Bharat / jagte-raho

தேவாலயத்திலிருந்து ரூ.20,000 திருட்டு! - ஆரல்வாய்மொழி தேவாலயம் சிசிடிவி

ஆரல்வாய்மொழி பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர் குறித்த கண்காணிப்பு படக்கருவியின் காட்சிகள் கிடைத்துள்ளன. இவர் இங்கிருந்த உண்டியலில் இருந்து 20 ஆயிரம் ரூபாயைத் அக்டோபர் 2ஆம் தேதி திருடியுள்ளார்.

aralvaimozhi mission compound church theft cctv

author img

By

Published : Oct 8, 2020, 3:09 AM IST

கன்னியாகுமரி: தேவாலயத்தில் இருந்து திருடிய நபர் குறித்து கண்காணிப்புப் படக்கருவியின் காட்சிப் பதிவுகள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது.

இந்தத் தேவாலயத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் தினந்தோறும் வந்து பிரார்த்தனை செய்து காணிக்கையும் செலுத்தி வருகின்றனர்.

இவ்வேளையில், அக்டோபர் 2ஆம் தேதி தேவாலயத்திலுள்ள காணிக்கை பெட்டியை உடைத்து, அதில் இருந்த சுமார் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவாலயத்திலிருந்து ரூ.20,000 திருட்டு; சிசிடிவி காட்சிகள்

தற்போது, தேவாலயத்தில் கொள்ளையடிக்கும் காட்சிகள் அடங்கிய கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளை காவல் துறையினர் கைபற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் கொள்ளையடித்த நபரை அடையாளம் கண்டுபிடித்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஆரல்வாய்மொழி காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.