சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காமராஜபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சார் பதிவாளராக தினேஷ் ராகவன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வரும் இந்த அலுவலகத்தில், பத்திரப்பதிவு, திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பத்திரப்பதிவு செய்ய வந்தவரிடம் அலுவலர்கள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், லஞ்சம் வாங்கிய அலுவலர்களை கையும் களவுமாக பிடித்தனர். இதைத்தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகம் முழுவதும் 20 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குழு சோதனை நடத்தியது.
இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'அண்ணா பல்கலை. உயர் சிறப்பு அந்தஸ்தை நிராகரித்தது தவறு!'