கடல் படம் மூலம் அறிமுகமாகி ரங்கூன், வை ராஜா வை, ஹரஹர மகாதேவகி, இருட்டறையில் முரட்டு குத்து, தேவராட்டம் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் கவுதம் கார்த்திக். நடிகர் கார்த்திக்கின் மகனான இவர், போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கவுதம் கார்த்திக்கிடம் வழிப்பறி
கவுதம் கார்த்திக் நாள்தோறும் அதிகாலையில் சைக்கிளிங் செல்வது வழக்கம். கடந்த 2ஆம் தேதி மெரினா வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, ராதாகிருஷ்ணன் சாலை - டி.டி.கே சாலை சந்திப்பில் வந்த அவரை அடையாளம் தெரியாத சிலர் வழிமறுத்து மிரட்டினர்.
செல்போனை பறித்த கும்பல்
அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற நடிகர் கவுதம் கார்த்திக்கை கீழே தள்ளி அவரது கையில் பேண்ட் மூலம் சுற்றப்பட்டிருந்த சாம்சங் ரக விலையுர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். இதில், கவுதம் கார்த்திக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான செய்தி வெளியான நிலையில், திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் கைது
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மயிலாப்பூர் காவல்துறையினர், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்படி, ராயப்பேட்டையைச் சேர்ந்த பைரூஸ் கான் (18) பிடித்து விசாரித்ததில், மயிலாப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது இவர்கள் தான் என்பது உறுதி செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கூட்டணிக் கட்சிகளுக்காக உயிரையும் கொடுப்போம் - 'நண்பேன்டா'அமைச்சர் செல்லூர் ராஜு