தார்வாட் (கர்நாடகம்): பயணிகள் வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தார்வாட் மாநிலத்தில் இட்டிகட்டி எனும் இடத்தில் வைத்து வேகமாக வந்த டிப்பர் லாரி, பயணிகளுடன் சென்ற டெம்போ டிராவலர் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த வாகனம் தாவனகிரே முதல் பெலகாவிக்கு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
இதில் முதலில் வாகனத்தில் சென்ற 5 பேர் இறந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சூழலில் அவர்களில் 3 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். அதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
இதில் 2 பேர் மட்டும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து தார்வாட் மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.