கத்தார்: பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று (டிச.18) கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சாம்பியன் அணிகளான அர்ஜென்டினா - பிரான்ஸ் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
இதனையடுத்து சிறிது நிமிடத்தில் 2-2 என்ற கணக்கில் பிரான்ஸ் ஆட்டத்தை சமன் செய்தது. அதன்பின் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 2 அணிகளும் தலா ஒரு கோல் அடித்து மீண்டும் ஆட்டத்தை சமனில் முடித்தனர். ஆகவே பெனால்டி ஷூட் முறை பின்பற்றப்பட்டது. அதில் பிரான்ஸ் அணி 2 கோல் மட்டுமே அடித்தது. அதேநேரம் 4 கோல்களை அடித்த அர்ஜென்டினா அணி திரில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
FIFA 2022 விருதுகள் விவரம்: பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி Golden Ball விருதினை தட்டிச் சென்றார். அதேபோல் நடப்பாண்டு கால்பந்து போட்டியில் அதிகமாக கோல்களை(8) அடித்த பிரான்சின் கைலியன் எம்பாவே Golden Boot விருதினை வென்றுள்ளார்.
அர்ஜெண்டினாவின் எமிலியானோ மார்டின்ஸ் Golden Glove விருதையும், என்சோ பெர்னான்டஸ் FIFA Young Player விருதையும் பெற்றுள்ளனர்.
FIFA 2022 பரிசுத்தொகை: சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு 42 மில்லியன் (ரூ.347 கோடி) பரிசுத்தொகையை கொடுக்கப்படும். இரண்டாவது இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு 30 மில்லியன் (ரூ.248 கோடி) கொடுக்கப்படும். மூன்றாம் இடம் பெற்ற குரோஷியா அணிக்கு 27 மில்லியன் (ரூ.223 கோடி) கொடுக்கப்படும். நான்காம் இடம் பிடித்த மொராக்கொ அணி 25 மில்லியன் (ரூ.206 கோடி) பரிசுத்தொகையாக கொடுக்கப்படும்.
இதையும் படிங்க: FIFA World cup: 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அர்ஜென்டினா வெற்றி; கொண்டாடும் ரசிகர்கள்