ETV Bharat / international

கூகுளுக்கு ரூ.3200 கோடி அபராதம்; இருப்பிட தரவு கண்காணிப்பு வழக்கில் அதிரடி!

பயனர்களின் அனுதியின்றி அவர்களது இருப்பிடத் தரவுகளை (location data) கண்காணித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கூகுள் நிறுவனத்திற்கு ஏறத்தாழ 400 மில்லியன் டாலரை அபரதமாக விதித்து அமெரிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

கூகுள்
கூகுள்
author img

By

Published : Nov 15, 2022, 1:27 PM IST

நியூயார்க்: இணைய தேடுபொறியில் நம்பர் ஒன் மற்றும் நம்பகத்தன்மை கொண்ட நிறுவனமாக கூகுள் விளங்குகிறது. பல நேரங்களில் கூகுள் நிறுவனமும் பயனர்களின் ரகசிய தகவல்களை, அவர்களது அனுதியின்றி சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களை செய்து வழக்குகளில் சிக்கி அபராதம் செலுத்தி வருகிறது.

கடந்த மாதம் கூட ஆண்ட்ராய்டு பயனர்களின் இருப்பிடத் தரவுகளை அனுதியின்றி கூகுள் கண்காணித்ததாக அமெரிக்காவின் அரிசோனா மாகாண நீதிமன்றம் 85 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தது. அரிசோனாவை தொடர்ந்து, 40 மாகாணங்களில் கூகுள் நிறுவனம் இதே போன்று பயனர்களின் தரவுகளை சட்டவிரோதமாக கண்காணித்தாக புகார்கள் எழுந்தன. செல்போன்களில் உள்ள லொகேஷனை பயனர்கள் முடக்கிய போதும், அவர்களுக்கே தெரியாமல் கூகுள் அதன் தரவுகளை சேகரித்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்த புகார்களை விசாரித்த ஓரிகன் மற்றும் நெபரஸ்கா மாகாண நீதிமன்றங்கள், மாகாண நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை கூகுள் மீறியதை உறுதி செய்தனர். கூகுளின் டிஜிட்டல் விளம்பர வர்த்தகத்திற்கு பயனர்களின் லொகேஷன் தரவுகள் தேவைப்படுவதால், விளம்பரம் தொடர்புடைய வருவாயை பெருக்கிக் கொள்ள பயனர்களின் தரவுகளை கண்காணிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து சட்டவிரோதமாக பயனர்களின் லொகேசன் டேடாவை கண்காணித்ததாக கூகுள் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாயை அபராதமாக விதித்தது. இதுவரை வரை இல்லாத அளவாக கூகுள் நிறுவனம் முதல்முறையாக அதிகபட்ச தொகையை அபராதமாக செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.