ETV Bharat / international

கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர் காயமின்றி தப்பினார் - செய்தி தொடர்பாளர்

கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர் காயமின்றி இன்றி பத்திரமாக இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர் காயங்கள் இன்றி தப்பினார்

author img

By

Published : Sep 15, 2022, 12:39 PM IST

கீவ் (உக்ரைன்): உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியுள்ளார், ஆனால் அவர் பலத்த காயம் அடையவில்லை என்று ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் Serhii Nykyforov, பேஸ்புக் பதிவில், பதிவிட்டிருந்ததாக உக்ரைனிய ஊடக இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்திற்குப் பிறகு மருத்துவர்கள் ஜெலென்ஸ்கியை பரிசோதித்தனர். அவர் பலத்த காயம் அடையவில்லை என்று தெரியவந்தது. பின் மருத்துவர்கள் ஜெலென்ஸ்கியுடன் வந்த அவரது டிரைவருக்கு மருத்துவ உதவி அளித்து ஆம்புலன்சுக்கு மாற்றினர். விபத்து குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்துவார்கள் என்று செய்தி தொடர்பாளர் கூறினார்.

ரஷ்யாவால் ஆறு மாத காலமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த Izium நகரை உக்ரைன் படைகள் கடந்த சனிக்கிழமை மீண்டும் கைப்பற்றின. உக்ரைன் படைகள் Izium நகரை கைப்பற்றியதைத் தொடர்ந்து ரஷ்ய படைகள் பின்வாங்க துவங்கியுள்ளது.

உக்ரைன் படைகள் கார்கிவ் பகுதி வழியாக கிழக்கு நோக்கி தாக்குதலைத் தொடங்கிய ஐந்து நாட்களுக்குப் பிறகு ரஷ்யப் படைகள் ஆயுதங்கள், வெடிமருந்துகளை போட்டுவிட்டு உக்ரைனின் கிழக்கு பகுதியை காலி செய்தன என்று உக்ரைன் தரைப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ரஷ்ய படைகளிடம் இருந்து கிழக்கு பகுதியை உக்ரைன் படைகள் மீட்டுவிட்டதாக அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். "மற்றொரு விடுவிக்கப்பட்ட குடியேற்றம்! இளவரசர் ரோமன் தி கிரேட் பெயரிடப்பட்ட 14 வது தனி இயந்திரமயமாக்கப்பட்ட படைக்கு நன்றி, Chkalovske, Karkiv பகுதியில் மீண்டும் உக்ரைன் கொடி பறக்கிறது என ஜெலன்ஸ்கி கூறினார்.

இதையும் படிங்க: ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவா' கொண்டாட்டம் - பிரதமர் மோடி வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.