உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் பேஸ்புக் செயலியின் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பெர்க் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். பேஸ்புக்கில் மார்கிற்கு அடுத்த பதவியில் 2008ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மேலும் பேஸ்புக்கின் முக்கிய பங்குகளில் சிறப்பாக செயல்பட்டு அதனை வளர்சிப் பாதையில் அழைந்து சென்றவர்.
சாண்ட்பெர்க் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதவி விலகுவதற்கான தனது முடிவைப் பற்றி ஒரு நீண்ட பதிவாக எழுதியுள்ளார். தனது பதிவில், ’ஒரு பார்ட்டியில் மார்க் ஜுக்கர்பெர்க்கை எப்படி சந்தித்தேன் என்பதையும், மேலும் இரவு முழுவதும் அவருடன் பேசினேன். எண்ணற்ற "இரவு உணவுகள் மற்றும் மார்க் உடனான உரையாடல்களுக்கு" பிறகு தான், பேஸ்புக்கில் தனக்கு எப்படி வேலை கிடைத்தது என்பதையும் சாண்ட்பெர்க் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
அந்த நேரத்தில் பேஸ்புக் தொடங்கிய தொடக்க காலமாக இருந்ததால், வேலை குழப்பமாக இருந்ததாக ஷெரில் அவரது பதிவில் தெரிவித்துள்ளார். ஷெரில் விலகியதை தொடர்ந்து மார்க் அவரது பேஸ்புக் பதிவில் ஷெரிலை மிஸ் செய்யப்போவதாகவும், அவரின் பணி பேஸ்புக்கில் சிறந்த இடங்களுக்கு எடுத்துச் சென்றதாகவும். அவருடனான 14 வருட பயணம் மூலம் அதிகமான விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மீண்டும் தொடங்கிய ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இயக்கம்