பாரீஸ் (பிரான்ஸ்): பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் (Grand Cross of the Legion of Honour) பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனால் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று (ஜூலை 13) தலைநகர் பாரீஸ் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று நடைபெற உள்ள பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக அதிபர் மாக்ரோனுடன் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, எலிசி அரண்மனையில் நடந்த விருது வழங்கும் விழாவின் புகைப்படங்களை ட்வீட் செய்து உள்ளார். “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்சின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் லெஜியன் ஆஃப் ஹானர் விருதை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கினார். இது கூட்டாண்மை உணர்வை உள்ளடக்கிய ஒரு அன்பான நிகழ்வு” என அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார்.
-
Moments privilégiés de la Fête Nationale de la France, qui remplissent tous les Indiens de fierté. pic.twitter.com/CHrhRFFyRe
— Narendra Modi (@narendramodi) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Moments privilégiés de la Fête Nationale de la France, qui remplissent tous les Indiens de fierté. pic.twitter.com/CHrhRFFyRe
— Narendra Modi (@narendramodi) July 14, 2023Moments privilégiés de la Fête Nationale de la France, qui remplissent tous les Indiens de fierté. pic.twitter.com/CHrhRFFyRe
— Narendra Modi (@narendramodi) July 14, 2023
"இந்திய மக்களின் சார்பாக அதிபர் இமானுவேல் மாக்ரோனுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்" என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக, பிரான்ஸ் அதிபர் மற்றும் முதல் பெண்மணி பிரிஜிட் மேக்ரான், எலிசி அரண்மனையில் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளித்தனர்.
நேற்று மாலை பிரதமர் மோடி புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது, பிரான்சில் UPI சேவையைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்தார். ரொக்கமில்லா உடனடி கட்டணத்தில் இந்திய கண்டுபிடிப்புகளுக்கு, பிரான்ஸ் நாட்டில் ஒரு பெரிய புதிய சந்தையை பிரதமர் மோடி திறந்து வைத்து உள்ளார்.
செய்ன் தீவில் உள்ள கலை நிகழ்ச்சிகள் மையமான La Seine Musicale மையத்தில் புலம்பெயர் இந்தியர்களிடையே 1 மணி நேர அளவிற்கு உற்சாகமாக பேசிய பிரதமர் மோடி, உலகம் புதியதை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் வேகமான வளர்ச்சியை மேற்கோள் காட்டி உள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் மார்சே பகுதியில் புதிய இந்திய தூதரகத்தை திறப்பதாக அறிவித்த மோடி, ஐரோப்பிய நாட்டில் முதுகலைப் பட்டம் பெறும் இந்திய மாணவர்களுக்கு ஐந்தாண்டு கால படிப்புக்குப் பிந்தைய பணி விசா கிடைக்கும் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டு உள்ளார்.
தான் பிரான்ஸ் நாட்டிற்கு பலமுறை வந்து உள்ளேன் என்றும், ஆனால், இம்முறை இந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதைக் குறிப்பிட்ட மோடி, இந்த முறை தான் வந்திருப்பது சிறப்பு வாய்ந்தது என தெரிவித்தார். இரண்டு நாடுகள் தங்களின் கூட்டாண்மையின் 25வது ஆண்டை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், இந்தியாவுக்கு அதன் ஆதரவையும், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளின் வலிமையையும் மோடி எடுத்துரைத்தார்.
இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மையின் முக்கிய அடித்தளமாக இருநாட்டு மக்களின் இணைப்பு உள்ளதாக குறிப்பிட்ட மோடி, புலம்பெயர் உறுப்பினர்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். உலக வல்லுநர்கள் நாட்டின் கவர்ச்சியை முதலீட்டு இடமாக அங்கீகரிப்பதாகவும், வளர்ச்சி அடிப்படையில் நாடு வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்
இதையும் படிங்க: என்னைப் போன்று ராகுல் காந்திக்கும் நீதி கிடைக்கும் - எம்எல்ஏ பழனி நாடார்