ETV Bharat / international

பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து விபத்து - மீட்புப் பணிகள் தீவிரம் - பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸில் (Philippine) படகு கவிழ்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 40 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 28, 2023, 9:34 AM IST

மணிலா (பிலிப்பைன்ஸ்): பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு அருகில் உள்ள ஒரு ஏரியில் இன்று (ஜூலை 28) அதிகாலை 1 மணியளவில் பயணிகள் உடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்த பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் ஊடகங்கள் அளித்த தகவலின்படி, இந்த விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 40 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

மேலும், 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த விபத்து நடைபெற்ற இடம், பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் உள்ளது. அதேநேரம், நகரில் உள்ள பினான் கோனானின் பரங்காய் கலினவான் என்ற இடத்தில் இருந்து 50 யார்டு தொலைவில் உள்ள எம்பிசிஏ பிரின்சஸ் அயா கேப்சைசுடு என்ற இடத்தில் உள்ளது.

முன்னதாக, விபத்துக்கு உள்ளான படகில் எத்தனை பயணிகள் பயணித்தனர் என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அது மட்டுமல்லாமல், திடீரென காற்று ஒரு பக்கமாக பலமாக வீசத் தொடங்கி உள்ளது. அந்த நேரத்தில் படகில் பயணித்த பயணிகள் அனைவரும் பீதி அடைந்து அலறிக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கி உள்ளனர்.

ஒரு கட்டத்தில், படகில் பயணித்த மொத்த பயணிகளும் படகின் ஒரு பக்கமாக வந்து குழுமி உள்ளனர். இந்த நிலையில்தான் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. அதிலும், துறைமுகம் உள்ள பக்கமாக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தொய்வின்று நடைபெற்று வருகிறது.

அதேநேரம், படகு நிர்வாகத்திடமும் உள்ளூர் காவல் துறையினர் தங்களது விசாரணையைத் தொடங்கி உள்ளனர். மேலும், படகில் பயணித்த நபர்களின் அடையாளங்கள் பெறப்பட்டு, அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களில் சிலர், தங்களுடன் பயணம் மேற்கொண்ட சிலர் இன்னும் கரைக்கு திரும்பவில்லை என கூறியதால், தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஒபாமாவின் சமையல்காரர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு - ஒபாமா தம்பதியர் வருத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.