ETV Bharat / international

நேபாள தேர்தல்; சொந்த தொகுதியில் 7 வது முறையாக வெற்றி பெற்றார் பிரதமர்

ஆளும் நேபாளி காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் சபையில் (HoR) இதுவரை 10 இடங்களை கைப்பற்றியுள்ளது, மேலும் 46 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

நேபாள தேர்தல்
நேபாள தேர்தல்
author img

By

Published : Nov 23, 2022, 12:01 PM IST

காத்மாண்டு (நேபாளம்): பிரதமர் ஷேர் பகதூர் டியூபா, தொலைதூர மேற்கு நேபாளத்தில் உள்ள தாடெல்துரா தொகுதியில் இருந்து தொடர்ந்து ஏழாவது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நேபாள காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்று தேர்தல் கணக்கில் இதுவரை முன்னிலையில் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிரதிநிதிகள் சபைக்கும் (HoR), ஏழு மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை தொடங்கியது.

1,302 வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளரான 31 வயதான சாகர் தாகலுக்கு எதிராக டியூபா 25,534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது அரசியல் வாழ்க்கையில் ஐந்து தசாப்தங்களில் எந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் டியூபா தோல்வியடைந்ததில்லை. 77 வயதான நேபாள காங்கிரஸ் தலைவர் டியூபா தற்போது ஐந்தாவது முறையாக பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

தாகல் ஒரு இளம் பொறியாளர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிபிசியின் சஜ்ஹா சவால் நிகழ்ச்சியில் பொது விவாதத்தின் போது டியூபாவுடன் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் டியூபாவுக்கு எதிராக போட்டியிட முடிவு செய்தார். இளைஞர்கள் அரசியலில் வாய்ப்பு பெற வேண்டும் மற்றும் டியூபா போன்ற மூத்தவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று தாகல் கூறினார்.

ஆளும் நேபாளி காங்கிரஸ் கட்சி, பிரதிநிதிகள் சபையில் (HoR) இதுவரை 11 இடங்களை கைப்பற்றியுள்ளது, மேலும் 46 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர் கேபி ஒலி தலைமையிலான CPN-UML இதுவரை 3 இடங்களில் வெற்றி பெற்று 42 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

காத்மாண்டு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ராஷ்டிரிய சௌந்திரக் கட்சி மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி, சிபிஎன்-யுனிஃபைட் சோசலிஸ்ட் மற்றும் நாகரிக் உன்முக்தி கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தைப் பெற்றுள்ளன.

நேபாளத்தின் 275 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்களிப்பின் மூலம், மீதமுள்ள 110 பேர் விகிதாசார தேர்தல் முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோன்று ஏழு மாகாண சபைகளில் மொத்தமுள்ள 550 உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிங்க: தெலங்கானா தொழில்துறை அமைச்சர் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.