பராகுவே: தென் அமெரிக்காவிற்கு வெளியுறவுத்அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (ஆக 21) பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். இந்த சிலையை நிறுவ முன்வந்ததற்காக அசன்சியன் நகராட்சியை வெகுவாக பாராட்டினார். அதோடு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவையும் பாராட்டினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, பராகுவேயில் சுதந்திர இயக்கம் தொடங்கியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க இயக்கம் தொடங்கிய காசா டி லா இன்டிபென்டென்சியாவை பார்வையிட்டேன். நமது பொதுவான போராட்டத்திற்கும் வளர்ந்து வரும் உறவுக்கும் இது ஒரு பொருத்தமான சான்றாக உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளான அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், ஜமைக்கா, மெக்சிகோ, பனாமா, பராகுவே, சுரினாம் மற்றும் உருகுவே நாடுகளின் தூதர்களுடன் டெல்லியில் இருந்து ஜெய்சங்கர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய, இந்திய கல்வி கவுன்சிலின் 6ஆவது கூட்டம்... மத்திய கல்வி அமைச்சர் பங்கேற்பு...