அமெரிக்கா: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரிச்சர்ட் வர்மாவை அமெரிக்க வெளியுறவுத்துறையின் உயர்மட்ட பதவிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பரிந்துரை செய்துள்ளார். 54 வயதான வர்மா, ஜனவரி 16, 2015 முதல் ஜனவரி 20, 2017 வரை இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியவர். தற்போது மாஸ்டர்கார்டில் தலைமைச் சட்ட அதிகாரி மற்றும் உலகளாவிய பொதுக் கொள்கையின் தலைவராக உள்ளார்.
அமெரிக்க செனட் விரும்பினால், அவர் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை செயலாளராக பணியாற்றுவார். இதன் மூலம் அவர் வெளியுறவுத்துறையில் மிக உயர்ந்த பதவி வகிக்கும் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். ஒபாமா ஆட்சியின் போது, வர்மா, சட்டமன்ற விவகாரங்களுக்கான உதவி செயலாளராகவும் பணியாற்றினார்.
ரிச்சர்ட் வர்மா அமெரிக்க செனட்டர் ஹாரி ரீட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகவும், அமெரிக்க செனட்டின் பெரும்பான்மை தலைவராக இருந்தார். மேலும் அவர் ஆசிய குழுமத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிங்க: கடும் குளிரில் நடுங்கும் அமெரிக்கா.. 2,270 விமான சேவை ரத்து..