காங்கோ: மத்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவின் தலைநகரான கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளதாக நேற்று (டிச.14)அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆப்பிரிக்கா சுகாதார அமைச்சர் லிசா நெம்பலெம்பா நாட்டின் தலைமை ஊடகத்திடம் தொலைபேசியில் பேசுகையில், "காங்கோ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த திங்கள் (டிச.12) அன்று விடிய விடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக நகருக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் 40 ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கின. நகரின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும் இதுவரை மீட்கப்பட்டவர்களை தவிர்த்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிரோடிருக்க வாய்ப்பில்லை" எனவும் கூறினார்.
இந்நிலையில் அமெரிக்க-ஆப்பிரிக்கா உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஆப்பிரிக்கா ஜனாதிபதி பெலிக்ஸ் ஷிசெகெடி கூறுகையில், "விபத்து குறித்து கேட்டதும் மிகவும் வருத்தமடைந்ததாக கூறினார். மீட்பு பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது”. என்றார்.
![காங்கோவில் கனமழையால் நிலச்சரிவு - 140 பேர் உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/death-toll-rises-to-more-than-140-in-floods-in-congo-capital_9225b944407844d28dc33fd469e33a69_1512a_1671042759_1058.jpg)
காங்கோவின் பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல பாலங்கள் மற்றும் சாலைகள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 140 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க:சத்தீஸ்கர் காங்கிரஸ் பிரமுகர் நடுரோட்டில் சுட்டுக்கொலை!