டாக்கா: வங்கதேச நாட்டில் கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் சரக்கு ரயில், ஏகாரோசிந்தூர் கோதுலி எக்ஸ்பிரஸ் இன்று மீது மோதி பயங்கர விபத்துள்ளானது. இந்த கோர விபத்தில், 20-க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் உயிரிழந்திருக்கலாம் எனவும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்விபத்து குறித்து பாய்ராப் ரயில்வே காவல் நிலைய அதிகாரி சிராஜுல் இஸ்லாம், "இன்று மதியம் 3.30 மணியளவில், சட்டோகிராம் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், தாகாவை நோக்கி சென்று கொண்டிருந்த 'ஏகாரோசிந்தூர் கோதுலி எக்ஸ்பிரஸ்' (Egaro Sindoor Godhuli Express) ரயிலின் பின்பக்க பெட்டிகளின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்து கிஷோர்கஞ்ச் மாவட்டம் பாய்ராப் பகுதியில் நடந்தது" என கூறியுள்ளார்.
இது குறித்து மீட்புப் படையினர் கூறுகையில், “இதுவரை இந்த விபத்தில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன” என்றனர். தீயணைப்பு துறையினர், மூன்று பயணிகள் ரயில் பெட்டி தடம் புரண்டதால், பல பேர் அதனுள் சிக்கியிருக்கலாம் என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் உயிர்த்தப்பினர். மேலும் சிலரின் உடல்கள் மற்றும் பலரும் ரயிலில் இடிபாடிகளுக்குள் சிக்கியிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இவ்விபத்து பற்றி தகவலறிந்த மீட்புப் படையினர், ரயில் கிரேனுடன் விபத்து நடந்த ரயில் நிலையத்துக்கு விரைந்தனர். வங்கதேச தீயணைப்பு சேவை மற்றும் சிவில் பாதுகாப்பு ஊடக தலைவர் ஷாஜகான் சிக்தேர், 12 தீயணைப்பு படையினர் இந்த ரயில் விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார். தாகா ரயில்வே போலீஸ் அதிகாரி அனோவர் ஹோசைன், முதற்கட்ட அறிக்கையின் மூலம் சரக்கு ரயில் ஏகாரோசிந்தூர் ரயில் பின்பக்க பெட்டிகள் மீது மோதியதால் இக்கோர விபத்து ஏற்பட்டதாக கூறினார்.
இதையும் படிங்க: நியூயார்க்கில் தொடரும் சீக்கியர்கள் மீதான தாக்குதல்.. நியூயார்க் மேயர் கண்டனம்!