பெய்ஜிங்: வடமேற்கு சீனாவில் நேற்று (டிச.18) நள்ளிரவு அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக கன்சு மாகாணத்தில் 100 பேரும், அதன் அருகாமையில் உள்ள குயின்காய் மாகாணத்தில் 11 பேரும் உயிரிழந்து உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லால், இதில் 200 பேர் காயம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக, கன்சு மாகாணத்தில் 96 பேரும், குயின்காய் மாகாணத்தில் 124 பேரும் காயம் அடைந்துள்ளனர். மேலும், குயின்காய் மாகாணத்தின் எல்லைப் பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவு வரை (3 மைல்) நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனை ஒருங்கிணைந்த நாடுகளின் புவியியல் ஆய்வின்படி, 5.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக நீர் பாதைகள், மின்சார விநியோகம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கி உள்ளன. இந்த நிலநடுக்கம் கன்சு மாகாணத்தின் தலைநகரான லன்சூவிலும் உணரப்பட்டு உள்ளது. இதனால் பல்கலைக்கழக மாணவர்கள், வளாகத்துக்கு வெளியே நின்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக கூடாரம், பெட் மற்றும் விரிப்புகள் ஆகியவை அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், உயிரிழப்புகளைக் குறைக்கும் வண்ணம் மீட்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நேபாளத்தில் 6.4 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 157க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது நாட்டின் தலைநகரான டெல்லியிலும் உணரப்பட்டது. அதேபோல், கடந்த அக்டோபரில் 6.3 என்ற ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரான் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு.. போலீஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் உட்பட 11 பேர் மரணம்..