துபாய்: சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனமான XPeng AEROHT, உலகளவில் ஏர் டாக்ஸி சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் தற்போது துபாயில் எலக்ட்ரிக் ஏர் டாக்ஸி சோதனையை செய்தது. ஏர் டாக்ஸியில் பயணிகளை ஏற்றிச் சென்று சோதனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக ஜெட் விமானங்களில் இருக்கும் காக்பிட் (cockpit) மற்றும் பைலட் இல்லாமல் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், துபாயில் இந்த ஏர் டாக்ஸி சேவை இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டாக்ஸி இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது என்றும், எட்டு ப்ரொப்பல்லர்களால் இயக்கப்படுகிறது என்றும், மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் XPeng AEROHT நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எலக்ட்ரிக் ஏர் டாக்ஸி, இடைநிறுத்தம் இன்றி பாயின்ட் டூ பாயின்ட் சேவை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைலட் இல்லாத இந்த எலக்ட்ரிக் ஏர் டாக்ஸி சேவை, போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிக்க உதவியாக இருக்கும் என்று துபாய் விமான போக்குவரத்து கழகம் தெரிவித்தது.
அதேநேரம், இந்த வாகனத்தில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் ஆயுள், போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு, பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்புகளில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலத்திற்கு அடியில் இயற்பியல் ஆய்வகம் - தென் கொரியா புதிய முயற்சி