மொஹாலி: மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் புலனாய்வுத் தலைமையகத்தை குறிவைத்து நேற்று (மே 10) மாலை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இது ராக்கெட் லாஞ்சரைப் பயன்படுத்தி தலைமையகத்தில் ஏவப்பட்ட ராக்கெட் உந்து குண்டு.
எனினும் இந்த சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்பின் சத்தம் வெகு தூரம் கேட்டதாகவும், அலுவலகம் ஜன்னல்களின் கண்ணாடி சேதம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் உளவுத்துறை அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன. குண்டு வெடிப்பை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். இதுதொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் காவல் துறை இயக்குனரிடம் அறிக்கை கேட்டுள்ளார்.
இதையும் படிங்க:கோவை குண்டுவெடிப்பு; 24 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளியை தனிப்படை அமைத்து தேடும் சிபிசிஐடி!