லண்டன்: இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். 96 வயதான இவர் 70 ஆண்டு காலம் இங்கிலாந்தின் ராணியாக ஆட்சி புரிந்துள்ளார். அவரது உடல் வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ராணியின் இறுதி சடங்குகள் 11 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது. இதில் கலந்துகொள்ள பல நாட்டு அதிபர்கள், வெளிநாட்டில் உள்ள அரச குடும்பத்தினர், முக்கிய தலைவர்கள் லண்டனில் குவிந்துள்ளனர். அதனால் லண்டன் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து கண்டிராத வண்ணம், ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாடு முழுவதும் நேற்றிரவு 8 மணியளவில் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகாராணி 2ஆம் எலிசபெத் இறுதிச் சடங்கு... லண்டன் சென்றடைந்த திரௌபதி முர்மு...