நாடு முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தி உள்ளது. இதுவரை 190 கோடிக்கும் மேல் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அண்மையில் 5வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் , பூஸ்டர் டோஸ் அதாவது 3வது டோஸ் செலுத்திக் கொள்வது தொடர்பாகவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள , 2வது டோஸ் செலுத்திய நாளில் இருந்து 9 மாத இடைவெளி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் 3 மாத கால இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்வி, வேலை, தொழில் ரீதியாக வெளிநாடு செல்வோர் 9 மாத இடைவெளிக்கு பதிலாக 3 மாத இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்...
இதையும் படிங்க: 'நம் நாட்டிலேயே பல்வேறு வகை உணவு இருக்கும்போது, வெளிநாட்டு உணவு எதற்கு..?' - அமைச்சர் மா. சுப்பிரமணியன்