கலிஃபோர்னியா: ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எலோன் மஸ்க் நேற்று அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அதன் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்கப்போவதாக மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
எலோன் மஸ்க் மைக்ரோ பிளாக்கிங் தளத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்ததிலிருந்து, ட்விட்டரை புதுப்பிக்க முயற்சித்து வருகிறார். முந்தைய வாரம் , மஸ்க் ஒரு புதிய ட்விட்டர் பாலிசியை அறிவித்தார் மற்றும் சமூக ஊடக தளம் இனி வெறுப்பூட்டும் பேச்சு அல்லது எதிர்மறையான உள்ளடக்கம் கொண்ட ட்வீட்களை விளம்பரப்படுத்தாது என்றும் கூறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னர் தடைசெய்யப்பட்ட அல்லது இடைநிறுத்தப்பட்ட பல சர்ச்சைக்குரிய கணக்குகளை மீட்டெடுக்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் மிரட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்த எலான் மஸ்க் "ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நிறுத்தி வைப்பதாக அச்சுறுத்தியுள்ளது, ஆனால் ஏன் என்று எங்களிடம் கூறவில்லை" என தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக முன்பாக எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனம் ஸ்பேம் மற்றும் போலி போட் (Bot) கணக்குகளின் எண்ணிக்கையை தவறாக சித்தரிப்பதன் மூலம் அவர்களது பரஸ்பர கொள்முதல் ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டினார். இந்த அறிவிப்பை மஸ்க் வெளியிட்ட பிறகு, அமெரிக்க சந்தை கடுமையான சரிவைக் கண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீன போராட்டத்தில் பிபிசி செய்தியாளர் மீது தாக்குதல்