துருக்கியில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு 89 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஃபஹ்ரெடின் கோகா கூறுகையில், “கோவிட்-19 தாக்குதலுக்கு நாங்கள் முதல் உயிரை இழந்துள்ளோம். அவர் 89 வயதான முதியவர்.
கரோனா வைரஸ் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் சீனாவுடன் தொடர்பில் இருந்தவர். இதற்கிடையில் நாட்டில் புதிதாக 51 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆக நாட்டில் கரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.
இதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன” என்றார்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் முதலில் அறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்றுக்கு உலகில் இதுவரை 1 லட்சத்து 98 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஏழாயிரத்து 900 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 81 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானா: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆறாக உயர்வு