கரோனா வைரஸ் தொற்றுநோய், உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில், முதலில் பரவிய கரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே ஆட்டம் கொள்ள வைத்துள்ளது.
இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் கரோனா பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் உள்ளனர். ஸ்பெயின் நாட்டில் இன்று ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3, 434 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமர் கார்மென் கால்வோவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது , அவர் தனிமைப்படுத்தபட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: கரோனா: ஸ்பெயினில் ஒரேநாளில் 514 பேர் உயிரிழப்பு