ETV Bharat / international

சௌதி அரேபியா மூலம் வளைகுடா நாடுகளுக்குள் நுழைந்த ஒமைக்ரான்

வளைகுடா நாடான சௌதி அரேபியாவில் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

coronavirus variant omicron
coronavirus variant omicron
author img

By

Published : Dec 1, 2021, 6:52 PM IST

சௌதி அரேபிய நாட்டில் உருமாறிய கோவிட் ஒமைக்ரான் தொற்று முதல் முறையாக பதிவாகியுள்ளது. இது குறித்து சௌதி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வடக்கு ஆப்ரிக்கா நாடு ஒன்றிலிருந்து வந்த நபருக்கு ஒமைக்ரான் ரக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நபர் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வளைகுடா நாடுகளில் ஒமைக்ரான் ரகத் தொற்று முதன்முறையாக உறுதியாகியுள்ளது.

ஆப்ரிக்க நாடுகளில் முதல்முறையாக தென்பட்ட ஒமைக்ரான் ரகத் தொற்று அதிதீவிரத் தன்மை வாய்ந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது.

தடுப்பூசிகள் இந்த தொற்றை எதிர்கொள்ளும் திறன் கொண்டுள்ளதா என நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். இந்த தொற்றின் தன்மை குறித்து அடுத்த சில வாரங்களில் விரிவான தகவல் கிடைக்கும் என அமெரிக்காவின் முன்னணி பெருந்தொற்று நிபுணர் ஆந்தோனி பாச்சி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தனிநபரின் அனுமதியில்லாமல் புகைப்படம் பயன்படுத்தக் கூடாது - ட்விட்டர் புது விதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.