சவுதி அரேபிய நாட்டின் மன்னரும், இரு புனித மசூதிகளின் பாதுகாவலருமான முகமது பின் சல்மான் மரணித்துவிட்டார் அல்லது மரண தருவாயில் படுத்தப்படுக்கையாக உள்ளார். இது தொடர்பாக, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிக்கை ஒன்று வெளியிடலாம்.
ஏனெனில் தந்தைக்குப் பிறகு நாட்டை அவர் வழிநடத்துவார். ராஜ குடும்பத்தின் ரகசியத்தைக் காக்கும் பொருட்டு அரச குடும்பத்தினர் பலர் அரண்மனைக்குள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை பிரபல ட்விட்டர் வாசி முஜ்தாஹித் கூறியுள்ளார் என்று ஈரானிய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சவுதி மன்னர் சல்மானின் உடல்நிலை குறித்து அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்களும் செய்திகள் வெளியிட்டுவருகின்றன. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், “இளவரசர் நயீஃப் அவரின் தம்பி நவாப் பின் நயீஃப் உள்ளிட்டோரும் தடுப்புக் காவலில் உள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா-தலிபான்கள் ஒப்பந்தம், பாகிஸ்தானுக்கு சாதகமாகக்கூடாது