ஈரானில் பெட்ரோல் விலையை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது. இதனை எதிர்ந்து அந்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அமைதியாக ஆரம்பித்த போராட்டம் கலவரத்தில் முடிவதால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே,போராட்டக்காரர்கள் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு மூன்று பாதுகாப்புப் படையினரைக் கொன்றதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அலுவலர்கள் கூறினர்.
இதையும் படிங்க : இந்தியா-பாகிஸ்தான் அஞ்சல் சேவை மீண்டும் தொடக்கம்!