இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 28 லட்சத்தை தாண்டியுள்ளது.
கரோனா தொற்று அதிகரித்து வருவதால், நியூசிலாந்து நாட்டுக்கு செல்லும் இந்திய பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்து அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தடை உத்தரவு வரும் ஏப்ரல். 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அவர் கூறியுள்ளார். இந்தத் தடை இந்தியா வந்துள்ள நியூசிலாந்து நாட்டவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவிட்-19 பிடியில் சிக்கித் தவிக்கும் பிரேசில்; ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழப்பு