ETV Bharat / international

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் - 24 பாலஸ்தீனர் பலி!

ஜெருசலேம்: இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்திலுள்ள ஹமாஸ் படையினருக்கும் நடைபெற்ற தாக்குதலில் 24 பாலஸ்தீனியர் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் பலி அதிகரிப்பு
author img

By

Published : May 6, 2019, 10:12 AM IST

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்துவருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் எல்லைப் பகுதியில் இருக்கும் இஸ்ரேல் படையினரை வெளியேற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்றுவருகின்றது. இத்தகைய சூழலில் காஸா பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் அவ்வப்போது வான்வழித் தாக்குதல் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுகிழமை) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவின் பேரில் ஹமாஸ் படையினருக்கு சொந்தமான ஆயுதக்கிடங்கு, தொழிற்சாலை உள்ளிட்டவற்றை குறிவைத்து 600 ராக்கெட் மூலம் சுமார் 36 மணி நேரம் தொடர் தாக்குதலை அந்நாட்டு பாதுகாப்புப் படை நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 24 பாலஸ்தீனியர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் தெற்கு இஸ்ரேல் பகுதியில் நான்கு பேர் பலியாகியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, பாலஸ்தீன கர்ப்பிணி பெண் அவரது 14 மாத குழந்தையுடன் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனினும், இதனை இஸ்ரேல் பாதுகாப்புப் படை முற்றிலும் மறுத்துள்ளது.

இஸ்ரேல்,ஹமாஸ்,அதிகரிப்பு
தாக்குதலில் சேதமடைந்த இடத்தை பார்வையிடும் பெண்

இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை, எகிப்து தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.