ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். 1700க்கும் அதிகமனோர் படுகாயம் அடைந்தனர்.
ஈராக்கில் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து கடந்த மூன்று வார காலமாக அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் பாக்தாத் தெருக்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
வேலைவாய்ப்பின்மை, ஊழலுக்கு உள்ளிட்டவற்றுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பொதுச்சொத்துகள், கடைகள், அரசு அலுவலகங்கள் தீயிட்டு கொளுத்தி சேதப்படுத்தப்பட்டன. இதனையடுத்து காவல்துறையினர் ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி செய்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் பாக்தாத் வீதிகள் போர்க்களம்போல் காட்சியளித்தன. இந்த வன்முறையில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: சிரியாவில் மீண்டும் அமெரிக்கப் படைகள்!