இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அழைப்பை ஏற்று, அரசு முறை பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வரும் 22ஆம் தேதி அமெரிக்க செல்ல இருக்கிறார்" எனக் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு அவர் செல்வது இதுவே முதன்முறையாகும்.
அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான நல்லுறவு நலிவடைந்து வரும் நிலையில், இந்த சந்திப்பின் மூலம் இருதரப்பு உறவுகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன், பாகிஸ்தானைச் சேர்ந்த பலூசிஸ்தான் விடுதலை அமைப்பை (Balochistan Liberation Army) பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்தது. இதைத்தொடர்ந்து, அந்த அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சையத் மீது பயங்கரவாதிகள் சட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.