ஜோர்டன் தலைநகர் அம்மானுக்கு அருகே உள்ள சர்கா நகர் கிழக்கே ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் ராணுவத்தின் வெடி மற்றும் சேமிப்பு கிடங்கு உள்ளன. இந்த கிடங்கு பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 11) காலை உயர் வெப்பநிலை காரணமாக கிடங்கிலிருந்த குண்டுகள் ஒன்றிற்குள் உள்ள ரசாயன எதிர்வினை ஏற்படுத்தி அடுத்தடுத்து வெடி விபத்து ஏற்பட்டு தீ பிடித்தது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வெடி விபத்தின் அதிர்வுகள் அருகிலிருந்த வீடுகளில் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.