எத்தியோப்பியாவிலிருந்து கென்யா நாட்டிற்கு 157 விமானிகளுடன் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான 302 ரக விமானம் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்திலிருந்த 157 பயணிகளும் பலியாகினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பயணிகளும் இறந்தனர்.
இந்நிலையில் விபத்திற்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி, டி.எஃப்.டி.ஆர்., சி.வி.ஆர். கருவி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கறுப்புப் பெட்டியிலிருந்து தகவல்கள் பெறப்பட்ட பிறகுதான் விபத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் சிக்கிய விமானம் போயிங் 737 மேக்ஸ் வகையைச் சேர்ந்தவையாகும். இந்தவகை விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது கவனிக்கத்தக்கது.
கடந்த ஐந்து மாதங்களில் இந்தவகை விமானங்களில் எட்டு விமானங்கள் விபத்தில் சிக்கியிருப்பதும், 2018ஆம் ஆண்டு இந்தோனேசியாவைச் சேர்ந்த லைன்ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமானம் விபத்தில் சிக்கி 180 பயணிகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.