ஈராக் நாட்டில், வாடி த்லாப் பகுதியில் தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். தாக்குதலின் விளைவாக நான்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும், தீவிரவாதிகளின் ஆறு ரகசிய மறைவிடங்களும் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்டது. இதே போல், சலாஹுதீன் (Salahudin) மாகாணத்தின் அல்-ஜசிரா பகுதியில், வெடிக்கும் பெல்ட்களை அணிந்தபடி சுற்றித்திரிந்த நான்கு தீவிரவாதிகளை மாகாண காவல் துறையினர் சுட்டுக்கொன்றனர்.
குறிப்பாக, ஐ.எஸ். கட்டுப்பாட்டிலிருந்த சன்னி மாகாணத்தில் (Sunni provinces) உள்ள ஹஷ்த் ஷாபி படைகள் (Hashd Shaabi forces) உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மீதும், பொதுமக்கள் மீதும் நடைபெறும் தாக்குதல்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தீவிரப்படுத்தியதின் விளைவாக தான், இந்த அதிரடி தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!