ஆப்கானிஸ்தானின் மிதர்லாம் மாவட்டத்திற்குட்பட்ட பாஸ்ராம் கிராமத்தில், குழந்தைகள் தெருவில் விளையாடி கொண்டிருந்த போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒவ்வொரு மாதமும் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான சம்பவத்தில் கிட்டத்தட்ட 120 பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.