விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அஸான்ஞ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஏற்கனவே அவர் மீது ஸ்வீடனில் இருந்த பாலியல் வழக்கு மீண்டும் தொடங்கப்படும் என பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
2010ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் விக்கிலீக்ஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது ஜூலியன் அஸான்ஞ் மீது இரு பெண்கள் பாலியல் வன்புணர்வு வழக்கு தொடுத்தனர். ஆனால் ஈக்வேடார் நாட்டு லண்டன் தூதரகத்தில் ஜூலியன் அஸான்ஞ் அடைக்கலம் புகுந்திருந்ததால் இந்த வழக்கைத் தொடர முடியவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த வழக்கு மீண்டும் தொடங்கும் என பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.