பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் நேற்று (அக்.16) அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உயிரிழந்த ஆசிரியரின் உடல் இருந்த இடத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் கத்தி மற்றும் துப்பாக்கியுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது, காவல் துறையினர் பல முறை அவரை சரணடைய வலியுறுத்தியும் அந்த நபர் மறுத்ததால், காவலர்கள் அவரை சுட்டுக்கொன்றனர்.
கடந்த 10 நாள்களுக்கு முன்னர்தான், இஸ்லாமிய இறை தூதராக என்று அறியப்படும் முஹம்மது குறித்து வெளிவரும் கேலிச்சித்தரங்களைப் பற்றிய விவாதத்திற்கு அந்த ஆசிரியர் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது முதலே அவருக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் வரத்தொடங்கின.
மேலும், அந்த ஆசிரியருக்கு எதிராக மாணவர் ஒருவரின் தாயரும் புகார் அளித்திருந்தார். இந்தச் சூழ்நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியர் பணிபுரிந்த பள்ளியை அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், "இந்த பயங்கரவாத தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கதக்கது. இந்தத் தாக்குதலால் நம் தேசம் பிளவுபடக்கூடாது. ஏனென்றால், பயங்கரவாதிகளின் விருப்பமும் அதுதான்" என்றார்.
காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட பிரான்ஸ் காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நீட்டிக்க புதின் விருப்பம்!