கரோனா வைரஸ் தொற்றுநோய், உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில், முதலில் பரவிய கரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது.
மற்ற நாடுகளிலும் வைரஸ் நோய் தொடர்ந்து பரவிய நிலையில், சீனாவில் மட்டும் 3281 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஸ்பெயின் நாட்டில் இன்று ஒரே நாளில் 443 பேர் நோய் பாதிப்புடன் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 3,434 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவில் முதலில் பரவியிருந்தாலும் இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துவருகிறது.
இதையும் படிங்க: உபர் சீருந்து சேவை 21 நாள்கள் நிறுத்திவைப்பு