ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஃபால்கன் ஐ 2 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்படவிருந்த ரஷ்யாவின் சோயுஸ்-எஸ்.டி-ஏ ராக்கெட் திட்டம் மோசமான வானிலை காரணமாக நாளை (டிசம்பர் 1) ஒத்திவைக்கப்படுவதாக ரோஸ்கோஸ்மோஸ் இயக்குநர் ஜெனரல் டிமிட்ரி ரோகோசின் அறிவித்தார்.
பிரான்ஸ் நாட்டின் கயானாவிலுள்ள கயானா விண்வெளி மையத்திலிருந்து இந்த ராக்கெட் முதலில் ஞாயிற்றுக்கிழமை ஏவ திட்டமிடப்பட்டது. இருப்பினும் மோசமான வானிலை காரணமாக ராக்கெட் ஏவும் திட்டம் முதலில் சனிக்கிழமையும் பின்னர் திங்கள்கிழமையும் ஒத்திவைக்கப்பட்டது.
கயானா விண்வெளி மையத்தில் நவம்பர் 27ஆம் தேதி நடத்தப்பட்ட ராக்கெட் இறுதி சோதனைகள் வெற்றிகரமாக முடிந்ததாகவும், எந்தக் குறைபாடுகளும் ராக்கெட்டில் கண்டறியப்படவில்லை என்றும் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ரஷ்ய ராக்கெட்டில் இறுதி நிமிடத்தில் சில தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதாலேயே ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: அவரச அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள மாடர்னா