பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள காவல் துறை தலைமையகத்துக்குள் நேற்று ஒர் நபர் கத்தியை ஏந்திவாறு உள்ளே நுழைந்துள்ளார்.
அங்கிருந்து காவல் துறையினர் சிலர் அந்த ஆசாமியைத் தடுக்க முயன்றனர். அப்போது அந்த ஆசாமி தடுக்க வந்த காவல் துறையினர் மீது கத்தியால் குத்தியுள்ளார்.
தொடர்ந்து, நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த காவலர்கள் கத்திகுத்து நடத்திய ஆசாமியின் தலையில் சுட்டு வீழ்த்தினர்.
இச்சம்பவத்தில் அந்த நபருடன் சேர்த்து கத்தியால் குத்தப்பட்ட நான்கு காவலர்கள் என ஐந்து பேர் உயிரிழந்ததாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.