இன்றைய டிஜிட்டல் உலகில் சைபர் தாக்குதல் என்பது அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவருகிறது. தனி நபர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைவரும் இந்த சைபர் குற்றவாளிகளுக்கு இரையாகிவருகின்றனர்.
சமீபத்தில்கூட ஜனநாயக கட்சியின் அமெரிக்கா அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் முதல் பில் கேட்ஸ் வரை முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது பிளாக்பாட் என்ற தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் சைபர் குற்றவாளிகள் திருடியுள்ளனர்.
ஆக்ஸ்போர்டு, லவுபரோ, ரீடிங், ஆம்ப்ரோஸ் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளன. இந்த சைபர் தாக்குதல் மே மாதம் நடைபெற்றிருந்தாலும், தற்போதுதான் பிளாக்பாட் இந்தத் தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிளாக்பாட் என்ற தளத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், நிதி திரட்டும் நிறுவனங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் சேமிக்கும் ஒரு தளமாகும்.
இந்த பிளாக்பாட் தளம்தான் தற்போது ரான்சம்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்ச கணக்கான மாணவர்களின் மொபைல் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை சைபர் குற்றவாளிகள் திருடியுள்ளனர்.
இருப்பினும் இந்த சைபர் தாக்குதலில் கிரேடிட் கார்ட் தகவல்கள் ஏதுவும் திருடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றவாளிக்ள் கேட்ட பெரும் தொகையை பிளாக்பாட் அளித்ததாகவும் அதைத்தொடர்ந்து சைபர் குற்றவாளிகள் தாங்கள் திருடிய தரவுகளை டெலிட் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எவ்வளவு தொகை அளிக்கப்பட்டது என்ற தகவல்களை வெளியிட பிளாக்பாட் நிறுவனம் மறுத்துவிட்டது.
இதையும் படிங்க: பெருநிறுவனங்களின் ஊழியர்களை குறிவைக்கும் இ-மெயில் ஃபார்வேர்டர்