ETV Bharat / international

பள்ளி திரும்பிய பருவநிலைப் போராளி!

author img

By

Published : Aug 26, 2020, 1:03 PM IST

ஸ்டாக்ஹோம் : பருவநிலை மாற்றம் குறித்து கடந்த ஓர் ஆண்டாக பரப்புரையில் ஈடுபட்டிருந்த கிரேட்டா தன்பெர்க், தற்போது மீண்டும் பள்ளிக்குத் திரும்பியுள்ளார்.

Greta Thunberg
Greta Thunberg

பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வாளர்கள் கூறுவதை அரசியல்வாதிகள் கேட்க வேண்டும் எனக்கூறி விருதுகளை மறுப்பது, ஐநா மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை முறைப்பது என்று கடந்த ஒரு ஆண்டாக உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தன்பெர்க்.

உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு தனியொரு ஆளாகப் போராட்டத்தைத் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து "Friday for Future" என்று இவர் தொடங்கிய போராட்டத்தில் உலகெங்கும் இருந்து பல லட்சம் மாணவர்கள் இணைந்து கொண்டனர். பருவநிலை மாற்றம் குறித்த பரப்புரைகளை மேற்கொள்ள ஏதுவாக பள்ளிப்படிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைவிட்டார்.

அதன்பின், பருநிலை மாற்றம் குறித்து உலகெங்கும் நடைபெற்ற பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றினார். குறிப்பாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநாவின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில், "How dare you" என்று தொடங்கிய இவரது பேச்சு உலகெங்கும் தீயாக பரவியது.

இந்நிலையில், சுமார் ஒரு ஆண்டிற்கு பிறகு தற்போது கிரேட்டா தன்பெர்க் பள்ளிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், "ஒர் ஆண்டுக்கு பின் பள்ளிக்கு மீண்டும் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு நியாயமற்றது'- கிரேட்டா தன்பெர்க்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.