ETV Bharat / international

ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு - மீண்டும் ஊரடங்கு - MOSCOW

ரஷ்யாவில் கடந்த ஒருவாரமாக கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,159 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு
ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு
author img

By

Published : Oct 28, 2021, 7:37 PM IST

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. மேலும், 'AY 4.2' எனப்படும் புதிய வகை கரோனா தொற்றும் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் முதல் தினந்தோறும் தொற்று பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை சுமார் 4 லட்சம் என்ற உச்சத்தை அடைந்தது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 1,159 பேர் உயிரிழந்தனர்.

அதிக உயிரிழப்பு

பெருந்தொற்று காலம் தொடங்கியதில் இருந்து இதுவே மிகப்பெரிய ஒருநாள் இறப்பு எண்ணிகையாகும். இதன்மூலம், ரஷ்யாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,35,057 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடாக ரஷ்யா உருவெடுத்துள்ளது.

மீண்டும் ஊரடங்கு

ஏற்கெனவே, தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ஊடரங்கு மற்றும் கரோனா தொற்று கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், அக்.30ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை ஊரடங்கை ரஷ்ய அதிபர் விளாமிதிர் புதின் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கின் போது அரசு, தனியார் அலுவலகங்கள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் இன்று (அக். 28) முதல் பள்ளிகள், கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுப்போக்கு இடங்கள் மூடப்பட்டுள்ளன. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி கிடையாது. அத்தியாவசிய கடைகள், மருந்தகங்கள், உணவு பதப்படுத்தும் இடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சீனாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுதத்ப்பட்டுள்ளது. சில விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா... ஊரடங்கு அமல்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.